Vasiyam,Yanthiram,Astrology,Thayaththu

Vasiyam,Yanthiram,Astrology,Thayaththu
Vasiyam

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

Male Female Vasiyam In Chennai.Training Class For Vasiyam,Black Magic In Chennai

ஆண் பெண் வசியம்,காதலர் வசியம்,குடும்ப தொல்லை நீக்க  ,தெய்வ சக்திகள் பெற,வசிய மை செய்முறை,யந்திரம் எழுதும் முறை,மாந்திரீகம்,தாந்த்ரீகம்,பரிகாரங்கள் , தன வசிய முறை,சொத்து பிரச்சனை,எதிரி தொல்லை நீங்க,பில்லி சூனியம் விலகவும் பயிற்சி அளிக்கப்படும்.
இடம் :சென்னை பல்லாவரம் .நாள் :11.10.2015.காலை  9 முதல்  மாலை 5 வரை.கட்டணம் Rs 4000 மட்டும்.மதிய உணவு,தேநீர் ,கையேடு,பேனா வழங்கப்படும். முன்பதிவுக்கு :8015262015.

     ஸ்ரீகாலபைரவர்பீடம்,,சேலம்.

வியாழன், 18 ஜூன், 2015

இந்து சமயத்தில் ஆறு முக்கிய கடவுள்களும்! ஆறு முக்கிய பிரிவுகளும்



ந‌மது இந்து சமயத்தில் எண்ண‍ற்ற கடவுள்கள் இருந்தாலும், எண் ண‍ற்ற பிரிவுகளும் இருந்தாலும்,
அவை அத்த‍னையம் கீழுள்ள‍ ஆறு முக்கிய கடவுகள் மற்றும் பிரிவுகளிலிலிருந்தே உட்பிரிவுகளாக பிரிந்துள்ள‍து.
இப்போது  இந்து சமயத்தில் உள்ள‍ முக்கியமான ஆறு கடவுள்கள்?
1. சிவபெருமான்
2. மகாவிஷ்ணு
3. ஆதிபராசக்தி
4. விநாயகப் பெருமான்
5. முருகப் பெருமான்
6. சூரிய பகவான்
இப்போது இந்து சமயத்தில் உள்ள‍ ஆறு முக்கிய பிரிவுகளைப் பார்ப் போமா?
1. சைவம் 

2. வைணவம்
3. சாக்தேயம்
4. காணபத்தியம்
5. கௌமாரம்
6. சௌரம்  
மேற்கண்ட கடவுள்களை எந்தெந்த பிரிவினர் வணங்குகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
1 . சைவம் – சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வணங்குவது.

2 .வைணவம்மகாவிஷ்ணு பகவானை முழு முதற் கடவுளாக வணங்குவது.
3 . சாக்தேயம் – ஆதிபராசக்தி தேவியே முழுமுதற் கடவுள் என்று வழிபடுவது.
4 . காணபத்தியம் – கணபதியாகிய விநாய கப் பெருமானை முழு முதற் கடவுளாக வழிபடுவது.

5 .கௌமாரம்குமரக் கடவுளாகிய முருக ப் பெருமானை முழு முதற்கடவுளாக வழி படுவது.
6 . சௌரம் – சூரிய பகவானை முழுமுதற் கடவுளாக வழிபடுவது.


ஞாயிறு, 24 மே, 2015

தரித்திரத்தை தவிர்க்க, செல்வம் நிலைக்க சில எளிய வழிமுறைகள்



தரித்திரத்தை தவிர்த்து செல்வம் நிலைக்கச் செய்யும் உன்ன‍தமான எளிய வழிமுறைகளை நீங்கள் நடக்க‍வும் கீழே கொடுக்க‍ப்பட்டுள்ள‍து.
ஒருவருக்கு பணம் கொடுக்கவேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து கொடுக்க /வாங்க வேண்டும். செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடு க்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக்கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.
1) வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
2) இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.
3) வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.
4) சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது.
5) எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்க வேண்டும்.
6) வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.
7) அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது.
8) துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது.
9) உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள சிறு வழிமுறைகளை பின்பற்றி நீங்கள் தரித்திரத்தை தவிர்க்க, உங்கள் செல்வம் நிலைக்க, பணம் பெருக, விருத்தியாக வாழ்த்துக்கள்.

செவ்வாய், 19 மே, 2015

பில்லி, சூனியம், சத்ரு பயம், பகைவர் தொல்லை, செய்வினை, இழந்த பதவியைப் பெற


Posted By Muthukumar,On May 19,2015 


அய்யவாடி [ஐவர் பாடி];
இங்குள்ள  பிரத்தியங்கிரா  தேவி  ஆலயம்  18 சித்தர்கள்  பூஜித்தும்,  அகஸ்திய முனிவருக்குக்  காட்சி  தந்த ஸ்தலம்,  பஞ்ச பாண்டவர் பூஜித்த  ஸ்தலமுமாகும்.  இத்தேவியைத் தரிசனம்  செய்தால் எல்லா  கஷ்டங்களும் நீங்கி  வேண்டும்  வரங்களப்  பெறலாம்.  அமாவசை அன்று  காலை 10 மணி முதல்  1 மணி வரை  நிகும் பல யாக பூஜை.  அருள் தரும்  மகா  பிரத்தியாங்கிரா  தேவி  ஆலயம் தமிழ் நாட்டில் இங்கு  மட்டுமே  உள்ளது. செவ்வாய்க்கிழமை  நெய்  தீபம்  ஏற்றி  வழிபட  இழந்ததைப் பெறலாம்.  இவள்  மட்டுமே  16  பேறுகளை [செல்வங்கள்]  தரக் கூடியவள்.
வழித் தடம்;
கும்பகோணத்திலிருந்து 7.கி.மீ. தூரத்திலுள்ளது. [நாச்சியார்கோவில் செல்லும்  பாதையில்]

நாமக்கல்;  ஒன்பது  சித்தர்களால்  ஆராதிக்கப்பட்டு  உருவேற்றப்பட்ட  நரசிம்ம  மூர்த்தங்கள்  ஒன்பதில்  குறிப்பிடதக்க  சிறப்பினைப் பெற்றது,  நாமக்கல் ஸ்ரீ  நரசிம்ம மூர்த்தி  இக்கோவிலுக்கு  18 அடி  உயர  கூப்பிய கரத்துடன்  நிற்கும் மிகப் பழமை  வாய்ந்த ஸ்ரீ ஆஞ்ச நேயரை  பூஜிப்பதால்  செய்வினைப்  பாதிப்புகள்  விலகுகின்றன.
வழித் தடம்;
சேலத்திலிருந்து 28 கி.மீ. தூரத்தில் உள்ளது.

மதுரை- ஒத்தகடை;   ஒத்தகடை மெயின் ரோட்டில்  யானை  மலையின் பின்புறம்  யானை மலையின்  கீழ்  அமைந்துள்ளது. ஸ்ரீ யோக நரசிம்மர்  கோவில்.  இங்கு  நரசிம்மர்  யோக நிலையில்  காட்சி தரும் இவரை வழிபட பேய்,  பில்லி, சூன்யம்  விலகும்.  செவ்வாய் தோஷமுள்ளவர்  செவ்வாய்கிழமை  தோறும்  சிவப்பு வஸ்திரம்,  எலுமிச்சை  பானகம்  போட்டு  வணங்க  செவ்வாய்  தோசம்  நீங்கும்.

சிறுவாச்சூர்;  பில்லி- சூன்யம்  போன்றவற்றையே  தொழிலாக  கொண்டிருந்த  மந்தரவாதியை  அழித்து,  கோவில் கொண்டுள்ள  அம்மனான மதுரகாளியை  வழிபட்டால்  பில்லி- சூன்யங்கள் விலகி விடும்.  ஆதி சங்கரர்  வழிபட்ட ஸ்தலம்.  திங்கள், வெள்ளிக்கிழமை  மட்டும் திறந்திருக்கும்.
வழித் தடம்;  திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில்  பெரம்பலூருக்குத் தெற்கே 8 கி.மீ. தூரத்தில் உள்ளது.

ஐயர் மலை;
இம்மலையில்  பதினெட்டாம்  படி மிகுந்த சிறப்பு வாய்ந்தது.  மனச்சாட்சிப்படி  நடக்காதவராலும்  வாக்கு தவறியவராலும் பாதிக்கப்பட்டவர்கள்   இறைவனை  வழிப்பட்டு  பதினெட்டாம்  படியில்  சத்தியம்  செய்தால்  அதற்குண்டான பலன்  கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.  இறைவன்;  இரத்தினகிரீசர் அம்மன்;  அரும்பார் குழலி.
இம்மலையடிவாரத்தில்  உள்ள கம்பத்தடியில் கட்டுக்கட்டினால்  பில்லி, சூனியம், ஏவல், செய்வினை முதலியவை  நீங்கி  நலம் கிட்டி வருகிறது என்பது  தொன்று தொட்டு நடைபெற்று வருகிற நிகழ்ச்சியாகும்.
வழித் தடம்;  மணப்பாறை-குளித்தலை  சாலையில் உள்ளது.

கொல்லிமலை;    செய்வினை  ஒருவருக்கு  இருந்தால்  அதனை  சுலபமாக  அறியலாம்,  கை, கால் மூட்டுகளில்  வலி,  கண்களுக்குக்  கீழ் கருப்பு  வளையம்  இருந்தால்,  தோல்  வியாதி, மனதில் சதா சலிப்பு போன்றவை  இருக்கலாம்.
எந்தக்  காரணமும்  இன்றி  கணவன்  மனைவிக்குள் சண்டை, சச்சரவு  ஏற்பட்டு நன்றாக்  நடந்து  கொண்டிருந்த  வியாபாரம்  மந்தமாகி விடுதல்,  குழந்தை  பாக்கியமின்மை இவை  யாவும்  செய்வினை, ஏவல்  தோஷம்  ஆகும்.
இவை யாவும்  நீங்கிட  கொல்லிமலையில்  உள்ள எட்டுக்கை அம்மன்  எனப்படும். கொல்லிப்பாவை  ஆலயம் சென்று  வழிபடவும். செவ்வாய், வெள்ளி, அமாவசை,  பெளணமி  போன்றவை  கொல்லிப்பாவைக்கு  உகந்த நாட்கள்.
வழித் தடம்;  நாமக்கல்லில்   இருந்தும்  சேலத்திலிருந்தும் செல்லலாம். 

வியாழன், 30 ஏப்ரல், 2015

தொடர் பிரச்சனைகள், தரித்திர நிலை நீங்க

Posted By Muthukumar,On April 30,2015 

தொடர்ந்து 12 வியாழன் அன்று மதியம் 1-2 மணிக்குள் அரச மர நிழலில் 30 நிமிடங்கள் இருந்து பின்பு தானாக விழுந்த 3 இலைகளை எடுத்து, வீடு வந்ததும் அதை மஞ்சள் நீரில் அலம்பி பின்பு சிறு அரச மர குச்சியால் மஞ்சள் கொண்டு 'ஸ்ரீம்' மந்திரம் எழுதி அது மூன்றையும் இரவு 8-9 மணியளவில் மஹாலக்ஷ்மி கோவிலில் மறைவான இடத்தில் வைத்து வந்து விடவும். இதனால் நீண்ட கால பிரச்சனைகள், தரித்திர நிலை,பண பிரச்சனைகள்,தொடர் தோல்விகள் அனைத்தும் நீங்கி அனைத்து நன்மைகளும் தேடி வரும்.

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

உடனடி பண முன்னேற்றத்திற்கு

Posted By Muthukumar,On April 17,2015

உடனடி பண முன்னேற்றத்திற்கு  பரிகாரம் 

தொடர்ந்து ஆறு புதன்கிழமைகள் ஓடும் நீர் அல்லது கடல், ஏரி போன்றவற்றில் சிறிய குவளை (jug) (செம்பு அல்லது ஸ்டீல்) ஓன்றை விட்டு வர, நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் காணலாம். மிகுந்த பலன் தரும் பரிகாரம் இது. எந்த நபர் செய்ய ஆரம்பிக்கிறாரோ அவரே தொடர்ந்து செய்ய வேண்டும். மதியம் 1-2 இதை செய்ய உகந்த நேரம். முடியாதவர்கள் வேறு நேரத்தில் செய்யலாம்-மாலை ஆறு மணிக்குள்.

பில்லி, சூனியத்திலிருந்து உங்களைக் காக்கும் அரியவகை தெய்வீக மூலிகை!



நம்முன்னோர்கள் பல அரிய வகை மூலிகைகளை கண்டறிந்து, நமக்கு அளித்துச் சென்றுள்ள‍னர். ஆனால் நாமோ மேல்நாட்டு மோகம் காரணமாக அவைகளை புறந்தள்ளிவிடுகிறோம். மூலிகைகள் நோய்களில் இரு ந்து நம்மை
காப்பாற்றுவது மட்டும் அல்ல‍. பில்லி சூன்யத்திலிருந்தும் இவ்வ‍ளவு ஏன் கண் திருஷ்டியில் இருந்தும் நம்மை காத்து நிற்கிறது. அந்த தெய்வீக மூலிகை பற்றித்தான் இந்த பதிவு
ஆகாச கருடன் என்ற இந்த மூலிகை வித்தியாசமா னது தெய்வீகமானது. இந்த மூலிகை காற்றில் உள்ள ஈரக்காற்றை உறிஞ்சியே வளரும் தன்மை உடையது. இந்த கருடன் கிழங்கை வீட்டின் வாசலில் தொங்க விடுவதால் வீடு சுபிட்சமாகும். இந்த கிழங்கு சில மலைப் பகுதிகளில் மட்டுமே கிடை க்கிறது.
ந்த கிழங்கு வீட்டில் இருந்தால் விஷ ஜந்துக்கள் எதுவும் வீட்டில் வராது. இந்த கிழங்கை வீட்டில் தொங்க விடும்போது ஏவல், பில்லி, சூனியம், திரு ஷ்டி போன்றவற்றில் இருந்து நம்மை முற்றிலுமா க காக்கிறது. இதை மீறிகெட்ட சக்திகள் உள்நுழை யும்போது இதனின் உயிர்கொடுத்து நம்மை காப்பாற்றும் தன்மை உடையது இந்த மூலிகை.
இது அழுகிவிட்டால் நம்மை கடும் துர்சக்தியில் இருந்து காத்து அதன் உயிரை இழந்திருக்கிறது என உணர்ந்துகொள்ளவேண்டும். தாவரத்திற்கு உயிர் உள்ளதை இம்மூலிகைமூலம் மிக எளிதா க புரிந்து கொள்ளலாம். இந்த ஆகாச கருடன் ஆகாய பூதத்தின் சக்தியை அதிகம் கொண்ட கிழ ங்கு என்பதால் இதில் உயிர் சக்தி அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

திங்கள், 9 பிப்ரவரி, 2015

அனுமந்தர் வசிய மந்திரம்


Posted By Muthukumar,On Feb 9,2015
undefined

ஓம் ராம் அனுமந்தா ஓங்கார அனுமந்தா ஆங்கார அனுமந்தா
ஊங்கார அனுமந்தா அஞ்சனாதேவிபுத்திரா அரிராம தூதா 

அகோரவீரா அங் இங் ராம் அனுமந்தா வருக வருக 
வசி வசி சுவாகா. 
 

இம்மந்திரத்தை அனுமந்தர் சிலை வைத்து துளசி மாலை 
அணிவித்து கிழக்கு நோக்கி அமர்ந்து 48 நாட்களில் லட்சம் 
உரு செபிக்க சித்தியாகும்.
                                             

செபிக்கும் முறை
 

மிகவும் சுத்தமாய் தூய்மையான இடத்தில் அமர்ந்து செய்யவும்.
மந்திரம் செபிக்கும் 48 நாட்களும் தனி அறையில் படுக்கவேண்டும்
தீட்டு பட்டவர் பார்க்காதவாறு நம்மீது அவர்கள் ஒட்டாமலும் செபிக்கவேண்டும்.பெண்கள் சகவாசம்,மது,மாமிசம்,புகையிலை 

போன்ற பழக்கம் இல்லாமல் இருக்கவேண்டும்.
 

மந்திரம் செபிக்க தொடங்கியதும் இடையில் நிறுத்தக்கூடாது நிறுத்தினால் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதை 
கவனத்தில் கொள்ளவும். 
                                இம்மந்திரத்தின் பலன்
 

இம்மந்திரத்தை முறையாக செபித்தவருக்கு எதிரிகாளால் எந்த துன்பமும் ஏற்படாது.சகல காரியமும் சித்தியாகும்.
அனுமந்த உபாசகரை கண்டாலே பேய் பிசாசு பில்லி சூனியம் 
சகலமும் மிரண்டு ஓடிவிடும் அனுமந்த உபாசகரை எதிர்த்தவன்
பல துன்பங்களுக்கு ஆளாகி தொலைந்து போவான்.
 

மலக்குட்டி வசியம்


Posted By Muthukumar,On Feb 9,2015


திங்கள்கிழமை நாளில் மக நட்சத்திரத்தில் ஒரு சுத்தமான 
தனி அறையில் மஞ்சள் நீர் தெளித்து ஓர் வாழையிலையில் 
நவதானியத்தைத் பரப்பி அதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம்மந்தமில்லாததாக ஒரு உருவம் வரைந்து அதன் எதிரில் அவல்கடலை,பொறி,மது,மாமிசம்,புகையிலை,மூக்கு பொடி,
கஞ்சா முதலியன வைத்து அதனை சுற்றி மலர்களை வைத்து
   

'வாவா மலக்குட்டி மாயக்குட்டி மகத்தானகுட்டி
ஓம் ஸ்ரீம் கிரீம் சீக்கிரம் என் மாயவேலைகளில் 

உன் மனதை ஈடுகொடு சுவாஹா'
 

இம்மந்திரத்தை நாளொன்றுக்கு 1008 உரு வீதம் 41நாட்கள் செபிக்க
மலக்குட்டி வசியமாகி உனக்கு வேண்டிய உதவிகளை செய்யும்.
இதை வைத்துக்கொண்டு எவ்வளவோ ஜால வேடிக்கைகளை செய்யலாம்

திரிலோக வசியம்


Posted By Muthukumar,On Feb 9,2015
undefined
 சந்தனமரத்தில் உள்ள புல்லுருவிக்கு பூராட நட்சத்திரத்தில் 
எலுமிச்சம்பழம் பலி கொடுத்து அப்புல்லுருயை எடுத்து வந்து 
அதனுடன் புனுகு,ஜவ்வாது,பச்சைகற்பூரம் இவைகளை சேர்த்து 
பாலிரைத்து உருட்டி குளிகை(மாத்திரைகளாக) செய்து வைத்துக்கொண்டு இக்குளிகையை வாயில் ஒதுக்கிவைத்து கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை 1008 உரு செபிக்க மந்திரம் சித்தியாகும்.
இதனால் மேலோகம், பூலோகம், பாதாளலோகம் என்ற மூன்று 

லோகத்தில் உள்ளவர்களும் நம் கண்ணிற்க்குதோன்றி  நமக்கு  வசியமாவார்கள்.