Vasiyam,Yanthiram,Astrology,Thayaththu

Vasiyam,Yanthiram,Astrology,Thayaththu
Vasiyam

திங்கள், 9 பிப்ரவரி, 2015

அனுமந்தர் வசிய மந்திரம்


Posted By Muthukumar,On Feb 9,2015
undefined

ஓம் ராம் அனுமந்தா ஓங்கார அனுமந்தா ஆங்கார அனுமந்தா
ஊங்கார அனுமந்தா அஞ்சனாதேவிபுத்திரா அரிராம தூதா 

அகோரவீரா அங் இங் ராம் அனுமந்தா வருக வருக 
வசி வசி சுவாகா. 
 

இம்மந்திரத்தை அனுமந்தர் சிலை வைத்து துளசி மாலை 
அணிவித்து கிழக்கு நோக்கி அமர்ந்து 48 நாட்களில் லட்சம் 
உரு செபிக்க சித்தியாகும்.
                                             

செபிக்கும் முறை
 

மிகவும் சுத்தமாய் தூய்மையான இடத்தில் அமர்ந்து செய்யவும்.
மந்திரம் செபிக்கும் 48 நாட்களும் தனி அறையில் படுக்கவேண்டும்
தீட்டு பட்டவர் பார்க்காதவாறு நம்மீது அவர்கள் ஒட்டாமலும் செபிக்கவேண்டும்.பெண்கள் சகவாசம்,மது,மாமிசம்,புகையிலை 

போன்ற பழக்கம் இல்லாமல் இருக்கவேண்டும்.
 

மந்திரம் செபிக்க தொடங்கியதும் இடையில் நிறுத்தக்கூடாது நிறுத்தினால் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதை 
கவனத்தில் கொள்ளவும். 
                                இம்மந்திரத்தின் பலன்
 

இம்மந்திரத்தை முறையாக செபித்தவருக்கு எதிரிகாளால் எந்த துன்பமும் ஏற்படாது.சகல காரியமும் சித்தியாகும்.
அனுமந்த உபாசகரை கண்டாலே பேய் பிசாசு பில்லி சூனியம் 
சகலமும் மிரண்டு ஓடிவிடும் அனுமந்த உபாசகரை எதிர்த்தவன்
பல துன்பங்களுக்கு ஆளாகி தொலைந்து போவான்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக