Vasiyam,Yanthiram,Astrology,Thayaththu

Vasiyam,Yanthiram,Astrology,Thayaththu
Vasiyam

திங்கள், 9 பிப்ரவரி, 2015

அனுமந்தர் வசிய மந்திரம்


Posted By Muthukumar,On Feb 9,2015
undefined

ஓம் ராம் அனுமந்தா ஓங்கார அனுமந்தா ஆங்கார அனுமந்தா
ஊங்கார அனுமந்தா அஞ்சனாதேவிபுத்திரா அரிராம தூதா 

அகோரவீரா அங் இங் ராம் அனுமந்தா வருக வருக 
வசி வசி சுவாகா. 
 

இம்மந்திரத்தை அனுமந்தர் சிலை வைத்து துளசி மாலை 
அணிவித்து கிழக்கு நோக்கி அமர்ந்து 48 நாட்களில் லட்சம் 
உரு செபிக்க சித்தியாகும்.
                                             

செபிக்கும் முறை
 

மிகவும் சுத்தமாய் தூய்மையான இடத்தில் அமர்ந்து செய்யவும்.
மந்திரம் செபிக்கும் 48 நாட்களும் தனி அறையில் படுக்கவேண்டும்
தீட்டு பட்டவர் பார்க்காதவாறு நம்மீது அவர்கள் ஒட்டாமலும் செபிக்கவேண்டும்.பெண்கள் சகவாசம்,மது,மாமிசம்,புகையிலை 

போன்ற பழக்கம் இல்லாமல் இருக்கவேண்டும்.
 

மந்திரம் செபிக்க தொடங்கியதும் இடையில் நிறுத்தக்கூடாது நிறுத்தினால் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதை 
கவனத்தில் கொள்ளவும். 
                                இம்மந்திரத்தின் பலன்
 

இம்மந்திரத்தை முறையாக செபித்தவருக்கு எதிரிகாளால் எந்த துன்பமும் ஏற்படாது.சகல காரியமும் சித்தியாகும்.
அனுமந்த உபாசகரை கண்டாலே பேய் பிசாசு பில்லி சூனியம் 
சகலமும் மிரண்டு ஓடிவிடும் அனுமந்த உபாசகரை எதிர்த்தவன்
பல துன்பங்களுக்கு ஆளாகி தொலைந்து போவான்.
 

மலக்குட்டி வசியம்


Posted By Muthukumar,On Feb 9,2015


திங்கள்கிழமை நாளில் மக நட்சத்திரத்தில் ஒரு சுத்தமான 
தனி அறையில் மஞ்சள் நீர் தெளித்து ஓர் வாழையிலையில் 
நவதானியத்தைத் பரப்பி அதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம்மந்தமில்லாததாக ஒரு உருவம் வரைந்து அதன் எதிரில் அவல்கடலை,பொறி,மது,மாமிசம்,புகையிலை,மூக்கு பொடி,
கஞ்சா முதலியன வைத்து அதனை சுற்றி மலர்களை வைத்து
   

'வாவா மலக்குட்டி மாயக்குட்டி மகத்தானகுட்டி
ஓம் ஸ்ரீம் கிரீம் சீக்கிரம் என் மாயவேலைகளில் 

உன் மனதை ஈடுகொடு சுவாஹா'
 

இம்மந்திரத்தை நாளொன்றுக்கு 1008 உரு வீதம் 41நாட்கள் செபிக்க
மலக்குட்டி வசியமாகி உனக்கு வேண்டிய உதவிகளை செய்யும்.
இதை வைத்துக்கொண்டு எவ்வளவோ ஜால வேடிக்கைகளை செய்யலாம்

திரிலோக வசியம்


Posted By Muthukumar,On Feb 9,2015
undefined
 சந்தனமரத்தில் உள்ள புல்லுருவிக்கு பூராட நட்சத்திரத்தில் 
எலுமிச்சம்பழம் பலி கொடுத்து அப்புல்லுருயை எடுத்து வந்து 
அதனுடன் புனுகு,ஜவ்வாது,பச்சைகற்பூரம் இவைகளை சேர்த்து 
பாலிரைத்து உருட்டி குளிகை(மாத்திரைகளாக) செய்து வைத்துக்கொண்டு இக்குளிகையை வாயில் ஒதுக்கிவைத்து கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை 1008 உரு செபிக்க மந்திரம் சித்தியாகும்.
இதனால் மேலோகம், பூலோகம், பாதாளலோகம் என்ற மூன்று 

லோகத்தில் உள்ளவர்களும் நம் கண்ணிற்க்குதோன்றி  நமக்கு  வசியமாவார்கள்.